×

தொடரை கைப்பற்றிய தெ.ஆ.

கேப்டவுன்: பாக். கிரிக்கெட் அணியுடனான 2வது டெஸ்டில் முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்ரிக்கா 615 ரன் குவித்தது. பாக். முதல் இன்னிங்சில் 194 ரன்னில் ஆல் அவுட்டாகி பாலோ ஆன் பெற்றது. பின் 2வது இன்னிங்சை ஆடிய பாக்., 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழந்து 213 ரன் குவித்தது. 4ம் நாளான நேற்றும் சிறப்பாக ஆடிய பாக் 122.1 ஓவரில் 478 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதையடுத்து, 58 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2ம் இன்னிங்சை ஆடிய தென் ஆப்ரிக்கா, 7.1 ஓவரில் 61 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

The post தொடரை கைப்பற்றிய தெ.ஆ. appeared first on Dinakaran.

Tags : Capetown ,Bagh ,South Africa ,Outagi Palo Ann ,Pak. ,Dinakaran ,
× RELATED தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது...