மும்பை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டி:“இந்திய கிரிக்கெட் ஒரு நல்ல நேர்மையான நிலையை அடைவதற்கு அடுத்த 8 முதல் 10 நாட்கள் மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். இதில் முதலில் நட்சத்திர கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும். இந்திய கிரிக்கெட்டுக்கான முழு அர்ப்பணிப்பு என்பது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல. உண்மையான மருத்துவ அவசர நிலையைத் தவிர மற்ற நேரங்களில் இந்திய வீரர்கள் கிடைக்கும்படி தங்களைவைத்திருப்பது அவசியம். யாரும் முழுமையான அர்ப்பணிப்போடு செயல்படவில்லை என்றால் அவரை தேர்வு செய்யக்கூடாது.
ஓரளவு இங்கேயும் ஓரளவு வேறு இடங்களிலும் இருக்கும் வீரர்கள் தேவையில்லை. இனி யாரையும் புகழ்ந்து பேச வேண்டிய அவசியம் இல்லை. சமீபத்திய முடிவுகள் ஏமாற்றம் அளிக்கிறது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது அதில் இல்லை. கிரிக்கெட் வாரியம் ரசிகர்கள் போல செயல்படுவதை முதலில் நிறுத்திவிட்டு அணிக்காக செயல்பட வேண்டும். இந்திய அணி தான் முதலில் முக்கியம் என வீரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்”, என தெரிவித்துள்ளார்.
The post நட்சத்திர கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும்: சுனில் கவாஸ்கர் காட்டம் appeared first on Dinakaran.