×

பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியில் சபலென்கா சாம்பியன்

பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் இறுதிப் போட்டியின் மகளிர் பிரிவில் நேற்று பெலாரஸ் வீராங்கனை அரைனா சபலென்கா – ரஷ்ய வீராங்கனை பொலினா குடெர்மெடோவா மோதினர். முதல் செட்டை பறிகொடுத்த சபலென்கா பின்னர் சுதாரித்து அதிரடியாக ஆடி, 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பொலினாவை வென்று கோப்பையை கைப்பற்றினார்.

ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் ரெய்லி ஒபெல்கா, முதல் செட் ஆட்டத்தின்போது காயத்தால் வௌியேறினார். இதனால் செக் வீரர் ஜிரி லெஹெகா வென்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பையை கைப்பற்றினார்.

 

The post பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியில் சபலென்கா சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Sabalenka ,Brisbane ,BELARUSIAN ,ATHLETE ,ARINA SABALENKA ,POLINA GUDERMEDOVA ,BRISBANE INTERNATIONAL TENNIS FINALS ,Sudarati ,Brisbane Tennis Tournament ,Dinakaran ,
× RELATED பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் பெலாரஸ்...