×

ஜிம்பாப்வேயுடன் 2வது டெஸ்ட் ஆப்கன் அபார வெற்றி

புலவயோ: ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் சென்றுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது. முதல் போட்டி டிரா ஆனதை தொடர்ந்து, 2வது டெஸ்ட் போட்டி, கடந்த 2ம் தேதி துவங்கியது. முதல் இன்னிங்சை துவக்கிய ஆப்கானிஸ்தான் 157 ரன்னுக்கு சுருண்டது. அதற்கு பதிலடியாக ஜிம்பாப்வே களமிறங்கி 243 ரன்னில் ஆல் அவுட்டானது. பின், ஆப்கானிஸ்தான் 2வது இன்னிங்சில் சிறப்பாக ஆடி 363 ரன்களை குவித்தது.
அதைத் தொடர்ந்து 278 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே 2வது இன்னிங்சை தொடர்ந்தது. 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஜிம்பாப்வே அணி, 66 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன் எடுத்திருந்தது. எர்வின் 53, நகராவா 3 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று 5வது மற்றும் கடைசி நாளில் ஜிம்பாப்வே வீரர்கள் ஆட்டத்தை தொடர்ந்தனர். நேற்று வீசப்பட்ட 2வது ஓவரில் மேலும் ரன் எடுக்காமல் ரிச்சர்ட் நகாரவா அவுட்டானார். அவரைத் தொடர்ந்து கடைசி விக்கெட்டாக எர்வினும் ரன் எடுக்காமல் அவுட்டானார். இதனால் 4ம் நாள் ஸ்கோரில் மாற்றம் இல்லாமல் 205 ரன்னில் ஜிம்பாப்வேயின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியை 72 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான் 1-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக ஆப்கானிஸ்தானின் ரஷித் கானும், தொடர் நாயகனாக அதே அணியின் ரஹமத் ஷாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

The post ஜிம்பாப்வேயுடன் 2வது டெஸ்ட் ஆப்கன் அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Zimbabwe ,Bulawayo ,Dinakaran ,
× RELATED ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே முதல் டெஸ்ட் டிரா