×

நாகை மாவட்டத்தில் 1 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி

நாகப்பட்டினம்,ஜன.1: தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் வரும் 3ம் தேதி முதல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1 லட்சம் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாம் தொடங்குகிறது என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் 6-வது சுற்று கால் மற்றும் வாய்நோய்; தடுப்பூசி முகாம் வரும் 3ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை கிராமங்கள் வாரியாக இலவச தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இந்நோய் மிககொடிய வைரஸ் கிருமிகள் மூலம் பிளவுபட்ட குளம்புகள் உடைய பசு, எருமை, வெள்ளாடு போன்ற இனங்களை எளிதல் தாக்கக்கூடிய ஒன்று. மேலும், இது காற்று மற்றும் தண்ணீர் மூலம் மிக விரைவாக பரவக்கூடிய தன்மை உடையது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாயிலும் நாக்கிலும் கால் குளம்புகளுக்கு இடையிலும் புண்கள் ஏற்படும்.

இதனால் தீவனம் உட்கொள்ள இயலாமல் எளிதில் மெலிந்துவிடும். வெயில் காலங்களில் மூச்சிரைச்சல், புறத்தோல் தன்மை அடர்த்தியாகவும், அடர்ந்த ரோமங்களுடனும் காணப்படும். பால் உற்பத்தி முற்றிலும் குறைந்துவிடும். பாலூட்டும் கன்றுகள் உடனடியாக இறந்துவிடும். மலட்டுத் தன்மை ஏற்படும். கால்நடை வளர்ப்போர்க்கு மிக பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும். எனவே இந்நோய் வராமல் தடுக்க கால்நடைகளுக்கு வருடத்திற்கு இரண்டுமுறை தடுப்பூசி மேற்கொள்வது சிறந்த வழியாகும். எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருந்து இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. முகாம் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் நடைபெறும். எனவே கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு முகாமில் தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post நாகை மாவட்டத்தில் 1 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி appeared first on Dinakaran.

Tags : Nagapattinam district ,Nagapattinam ,Collector ,Akash ,Dinakaran ,
× RELATED நாகூர் அருகே சாராயம் கடத்திய வாலிபர் கைது