×

நாகூர் அருகே சாராயம் கடத்திய வாலிபர் கைது

 

நாகப்பட்டினம், ஜன. 6: நாகூர் அருகே சாராயம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த னர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் நடந்து வந்த ஒருவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தே கம் அடைந்தபோலீசார் அவர் கையில் வைத்திருந்தபையை சோதனை செய்தனர். அதில் சாராயம் இருந்தது தெரியவந் தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நன்னிலம் வாஞ்சியம் நத்தக்கொள்ளை காமராஜ் நகரை சேர்ந்த நல்லதம்பி மகன் சூர்யா (வயது 26) என்பதும், இவர் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நாகூர் போலீசார் சூர்யாவை கைது செய்தனர். மேலும் கடத்தி வரப்பட்ட 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

The post நாகூர் அருகே சாராயம் கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Nagore ,Nagapattinam ,Mela Vanjur ,Nagapattinam district ,Dinakaran ,
× RELATED நாகூரில் ஹனிபா இல்லம் அமைந்துள்ள தெரு,...