- தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
- பெரம்பலூர்
- மாவட்ட பொது
- குழு
- தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம்
- ராஜா
- மாநில தலைவர்
- சசிகுமார்
- மாநில துணைத் தலைவர்
- ஜான் போஸ்கோ
- தின மலர்
பெரம்பலூர்,டிச.30: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். மாநில தலைவர் சசிகுமார், மாநில துணை தலைவர் ஜான் போஸ்கோ, மாநில பொதுச்செயலாளர் குமார், மாநில செயலாளர்கள் புஷ்ப காந்தன், உதயசூரியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் சங்க வளர்ச்சி, பணிகள் குறித்து விவாதிக் கப்பட்டது. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதன்படி, மாவட்டத் தலைவராக செந்தமிழ் செல்வன், மாவட்ட துணை தலைவராக அன்பழகன், மாவட்டச் செயலாளராக நல்லுசாமி, மாவட்ட பொருளாளராக அகிலன், மாவட்ட துணை பொருளாளராக சுரேஷ்குமார், மாவட்ட அமைப்பு செயலாளராக முருகானந்தம், மாவட்ட பிரச்சார செயலாளராக அர்ச்சுணன், மாவட்ட சட்ட ஆலோசகராக ரெங்கராஜ் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டு பொறுப்பேற்றனர். இதில் சங்க நிர்வாகிகள், விஏஓக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் மாவட்ட செயலாள் ரெங்கராஜ் வரவேற்றார். முடிவில் மாவட்ட செயலாளர் நல்லுசாமி நன்றி கூறினார்.
The post தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.