×

பெரம்பலூர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முதல் நாள் பகல் பத்து புறப்பாடு

பெரம்பலூர்,ஜன.1: பெரம்பலூர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு முதல் நாள் பகல் பத்து புறப்பாடு நிகழ்ச்சி நடை பெற்றது. பெரம்பலூர் நகராட்சி, தெப்பக்குளம் அருகேயுள்ள மரகத வல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோயிலில், வைகுண்ட ஏகாதசி திரு விழாவையொட்டி நேற்று (31ஆம்தேதி) பகல் 10 புறப் பாடு முதல்நாள் பெருமாள் ராஜ அலங்காரத்தில் மாலை 5:30 மணியளவில் ஏகாதசி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க திருக் கோயில் உட் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

நிகழ்ச்சியில் முன்னால் அறங்காவலர் வைத்தீஸ் வரன், சரவணன், குமார் மற்றும் பெரம்பலூர், அரணாரை, துறைமங்கலம், எளம்பலூர், விளாமுத்தூர், நெடுவாசல் உள்ளிட்ட பகு திகளைச் சேர்ந்த ஏராள மான பெருமாள் பக்தர்கள் கலந்து கொண்டு பெரு மாள் அருள் பெற்றனர். பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியார் செய்திருந்தார்.

The post பெரம்பலூர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முதல் நாள் பகல் பத்து புறப்பாடு appeared first on Dinakaran.

Tags : Vaikunta Ekadashi ,Perambalur Perumal Temple ,Perambalur ,Vaikunta Ekadashi festival ,Maragatha Valli Thayar Sametha Madanagopala Swamy Temple ,Theppakulam ,Perambalur Municipality ,
× RELATED ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா:...