×

பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா

பெரம்பலூர்,டிச.31: ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு பெரம்பலூர் மதன கோபால சுவாமி திருக்கோவில் முன்புள்ள கம்பத்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் வட மாலை சாற்றுதல் நிகழ்ச்சி நடை பெற்றது.
பெரம்பலூர் நகராட்சியில் அமைந்துள்ள  மரகத வல்லித் தாயார் சமேத  மதனகோபால சுவாமி திருக்கோவிலில்  சீதா,  ராமர், ஆஞ்சநேயர், சமேத  ராமர் சன்னதியில் நேற்று (30 ஆம் தேதி)  ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10 மணியளவில் பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அதேபோல் ராஜபுரம் முன்பு எழுந்தருளி அருள் பாலித்துவரும் கம்பத்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் 12.10 மணியளவில் மங்கள வாத்தியம் முழங்க மகா தீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணியளவில், கம்பத்து ஆஞ்சநேயருக்கு 108 வடை மாலை சாற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு பூஜைகளில் நிகழ்ச் சிகளில் பெரம்பலூர் துறை மங்கலம், அரணாரை, எளம்பலூர், நெடுவாசல், விளாமுத்தூர் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, ஆஞ்ச நேயர் அருள் பெற்றுச் சென்றனர். பூஜைகளை பட்டாபி பட்டாச்சியர் செய்து வைத்தார். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கோவிந்தராஜ் செய்திருந் தார். நிகழ்வில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ் வரன், கீத்துக்கடை குமார், கோவிந்தராஜ், மகேஸ்வ ரன், ராஜமாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா appeared first on Dinakaran.

Tags : Perambalur Madana Gopala Swamy Temple Anjaneyar Jayanti Festival ,Perambalur ,Anjaneyar Jayanti ,Kambattu Anjaneyar ,Perambalur Madana Gopala Swamy ,Temple ,Maragatha ,Thayar Sametha ,Madanagopala ,Perambalur Municipality… ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்...