பெரம்பலூர், டிச.30: பெரம்பலூரில் தனியார் வங்கி உதவி மேலாளர் மனைவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பெரம்பலூர், பெரிய தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(36);தனியார் வங்கி உதவி மேலாளர். இவரது மனைவி பாரதி (33). இவர்களுக்கு, கடந்த 2016ல் திருமணமாகியது. இதில், தனு(6), தர்ஷன்(3) சிந்துஜா(10 மாதம்) என்ன மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு கணவன் மனைவி இருவரும் நல்ல விதமாக பேசிவிட்டு தூங்கச் சென்றனர். மீண்டும் நேற்று (29ஆம்தேதி) அதிகாலை 5.30 மணிக்கு தமிழ்ச் செல்வன் எழுந்து பார்க்கும் பொழுது சமையலறையில் பாரதி சேலையால் தூக்கிட்டு இறந்தார்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடம் சென்று பாரதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post பெரம்பலூரில் தனியார் வங்கி ஊழியர் மனைவி தற்கொலை appeared first on Dinakaran.