- திராவிட மாதிரி ஊராட்சி
- Jayankondam
- சந்நிதி தெரு
- ஜெயங்கொண்டம் நகர தி.மு.க
- திமுக
- நகர செயலாளர்
- நகர சபை
- துணை ஜனாதிபதி
- கருணாநிதி
- தின மலர்
ஜெயங்கொண்டம், டிச.30: ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில், திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சன்னிதி தெருவில் நடைபெற்றது. திமுக நகர செயலாளர், நகர் மன்ற துணைத் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். மாவட்ட பிரதிநிதி, நகர் மன்ற உறுப்பினர் இராஜமாணிக்கம் வரவேற்றார். தலைமை கழக சொற்பொழிவாளர்கள் ஈரோடு இறைவன், பொன்னேரி சிவா ,தலைமை கழக இளம் பேச்சாளர் செல்வஜெயந்தி, கழக சட்ட திட்ட திருத்தக்குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர் , சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தலைமை கழக ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் கலா சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சட்டமன்ற உறுப்பினர் பேசும்போது நமது முதல்வர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களின் தேவை என்ன என்பதை கேட்டு அறிந்து செய்து வருகின்றார். வீட்டிலிருந்தே அரசியல் செய்து கொண்டு நான் தான் அடுத்த முதல்வர் என ஒருவர் கூறிக் கொண்டுள்ளார். திமுகவில் நடத்துவது வாரிசு அரசியல் அல்ல. திமுக கட்சி துவங்கி 75 ஆண்டுகள் ஆகின்றன. திமுகவை எந்த ஒரு சக்தியாலும் அழிக்க முடியாது, 10 வருடமாக மோடி ஆட்சியில் இருந்து வருகிறார்.
ஆனால் தமிழகத்தில் ஒரு சீட்டு கூட பெற முடியவில்லை. மற்றொரு கட்சியில் ஒரே மேடையிலேயே தந்தையும் மகனும் தனித்தனி அரசியல் செய்கின்றனர். இவ்வாறு பேசினார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், மாவட்ட துணை செயலாளர் கணேசன், ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தன.சேகர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பானுமதி இராஜேந்திரன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தங்க.இராமகிருஷ்ணன்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இராமராஜன் மற்றும் நகர கழக நிர்வாகிகள்,வார்டு கழக செயலாளர்கள்,கழக தோழர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிறைவாக நகர இளைஞரணி அமைப்பாளர் கரிகாலன் நன்றி கூறினார்.
The post ஜெயங்கொண்டத்தில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.