×

பெரம்பலூர் மாவட்டத்தில் 100.21 சதவீதம் மழை பதிவு; மழை சேதம், கால்நடை பாதிப்புக்கு ₹25.39 லட்சம் நிவாரண உதவி

பெரம்பலூர், ஜன. 1: ஆண்டு சராசரி மழை அளவை எட்டியது. பெரம்பலூர் மாவட்டத்தில் 2023ம் ஆண்டில் 865.28 மிமீ என 100.21 சதவீதம் மழை பெய்துள்ளது. ஓராண்டில் கூரை, ஓட்டு வீடுகள் என 211 வீடுகள் சேதமடைந்துள்ளது. 45 கால்நடைகள் பலி. ரூ.25,39,800 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்று பெரம்பலூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தின் ஆண்டுசராசரி மழையளவு 861மிமீ ஆகும். இதில் குளிர்காலம் எனப்படும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 26 மிமீ, கோடைகாலம் எனப்படும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் 99 மிமீ, தென் மேற்குப் பருவ மழையாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய 4 மாதங்களில் 270மிமீ, வட கிழக்குப் பருவ மழையாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் 466மிமீ மழையும் சராசரியாகப் பெய்ய வேண்டும். இதன் படி கணக்குப் பார்த்தால் 2024ம் ஆண்டில் 100.21 சதவீத மழையே பெய்துள்ளது.

கடந்த 25ம் ஆண்டுக ளில் ஆண்டு சராசரி மழை அளவைவிட அதிகமாக 1999ல் 1176.52மிமீ, 2000-த்தில் 1014.96 மிமீ, 2003-ல் 883.65 மிமீ, 2004ல் 960.09 மிமீ, 2005-ல் 1312.80 மிமீ, 2007-ல் 887.49 மிமீ, 2008-ல் 1014.04 மிமீ, 2010-ல் 1097.00 மிமீ, 2011-ல் 1072.20 மிமீ, 2014-ல் 872.56 மிமீ, 2015-ல் 1109.34 மிமீ, 2017-ல் 984.10 மிமீ, 2020-ல் 1004.73 மிமீ, 2021-ல் மிக அதிகமாக 1388.09மிமீ, 2022-ல் 953.73 மிமீ என கொட்டித்தீர்த்துள்ளன. நடப்பாண்டு 2024ல் சராசரியாக 26மிமீ அளவுக்குப் பெய்ய வேண்டிய குளிர்கால மழை 29.18 மிமீ பெய்துள்ளது. சராசரியாக 99 மிமீ அளவுக் குப் பெய்ய வேண்டிய கோடைகால மழை 81.36 மிமீ பெய்துள்ளது. சராசரி யாக 270 மிமீ பெய்ய வேண்டிய தென் மேற்குப் பருவமழை சற்று அதிக ரித்து 264.27 மிமீ பெய்தது. சராசரியாக 466 மிமீ பெய்ய வேண்டிய வட கிழக்குப் பருவமழை 490.45 மிமீ பெய்துள்ளது. வட கிழக்கு பருவமழை சராசரிஅளவை காட்டி லும் 5.25 மி.மீ அதிக மாகப் பதிவாகி 105.25 சதவீத மழை பெய்துள்ள போதும், கோடை கால மழை 82.19 சதவீதமும், தென்மேற்குப் பருவமழை 97.88 சதவீதமும் பெய்த தால், 2024 ஆம் ஆண்டு ஆண்டு சராசரி மழை அளவை காட்டிலும் 0.49 சதவீதம் மட்டுமே கூடுதலாக மழை பெய்துள்ளது குறிப் பிடத்தக்கது.

பெஞ்சல் புயல், வடகிழக்குப் பருவமழை, வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் உருவான தொடர் மழை காரணமாக நீர்வளத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 73 ஏரிகளில் 52 ஏரிகளும், கொட்டரை, விசுவக்குடி அணைக்கட்டுகளும் 100 சதவீதக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தன. பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு 2024ம் ஆண்டு மழையின் காரணமாக மின்னல் தாக்கி ஒரு ஆணும், மழையால் சுவர் இடிந்து விழுந்து இரண்டு பெண்களும் என மொத்தம் 3-பேர் படுகாயம் மட்டுமே அடைந்துள்ளனர். உயிரிழப்பு ஏதுமில்லை. பருவ மழைக் காலங்களில் 22பசு மாடுகளும், 19 ஆடுகளும், 4-கன்றுகளும் என மொத்தம் 45 கால்நடைகள் பலியாகி உள்ளன.

பருவ மழைக் காலங்களில் 107 கூரைவீடுகள் முழுமையாகவும், பகுதிஅளவும் இடிந்து சேதமடைந்துள்ளன. ஓடு, ஆஸ்பெட்டாஸ் உள்ளிட்ட இதர வீடுகள் வகைகளில் 104 வீடுகள் என மொத்தம் 211 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பெரம்பலூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு மூலமாக காயமடைந்த 3 பேர்களுக்கும் ரூ.26,800- ம், பலியான கால்நடைகள் அளவில் ரூ9.81 லட்சமும், இடிந்த கூரை,ஓட்டு வீடுகள் அளவில் ரூ.15.32 லட்சமும் என மொத்தம் ரூ.25,39,800 நிவாரணத் தொகை தமிழக அரசின் சார்பாக பெற்று தரப்பட்டுள்ளது.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் 100.21 சதவீதம் மழை பதிவு; மழை சேதம், கால்நடை பாதிப்புக்கு ₹25.39 லட்சம் நிவாரண உதவி appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Perambalur district ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் உளுந்து...