×

சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

 

தேவகோட்டை, டிச.30: தேவகோட்டை நகரச்சிவன் கோயிலில் நேற்று முன்தினம் சனி பிரதோஷம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் மற்றும் நந்தீஸ்வரருக்கு பால், தயிர்,இளநீர்,பன்னீர் சந்தனம் மற்றும் அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பித்தனர். பிரதோஷ நாயன்மார் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உள்ளே பிரகாரமாக சுற்றி வரப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

The post சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Shiva temple ,Devakottai ,Shani Pradosham ,Devakottai Nagarachchivan temple ,Meenakshi Amman ,Sundareswarar ,Nandeeswarar ,
× RELATED தேவகோட்டை அருகே கல்லங்குடி கிராமத்தில் ஜன.8 மக்கள் தொடர்பு முகாம்