×

தேவகோட்டை அருகே கல்லங்குடி கிராமத்தில் ஜன.8 மக்கள் தொடர்பு முகாம்

சிவகங்கை, ஜன. 4: தேவகோட்டை அருகே கல்லங்குடி கிராமத்தில் ஜன.8 மக்கள் தொடர்பு முகாம் நடக்க உள்ளது. கலெக்டர் ஆஷா அஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தேவகோட்டை தாலுகா, கல்லங்குடி கிராமத்தில், ஜன.8 அன்று காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. அரசுத் துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே முகாமின் நோக்கமாகும். எனவே, மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தேவகோட்டை அருகே கல்லங்குடி கிராமத்தில் ஜன.8 மக்கள் தொடர்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Kallangudi village ,Devakottai ,Sivaganga ,Kallangudi ,Collector ,Asha Ajith ,Devakottai taluka ,
× RELATED சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு