- வைகை ஆறு
- Kadamalaikundu
- வருணநாடு
- கடமலைக்குண்டு ஊராட்சி உயர் மேல்நிலைப் பள்ளி
- கடமலைக்குண்டு…
- தின மலர்
வருசநாடு, டிச. 27: கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் கடந்த 5 நாட்களாக நாட்டு நலப்பணிகள் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கடமலைக்குண்டு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் முட்செடிகளை அகற்றுதல், வைகை ஆற்றில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்துதல், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல விடுதி வளாகங்களில் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். மேலும் கடமலைக்குண்டு முருகன் கோவில் மலையடிவாரத்தில் வேம்பு, தேக்கு, தோதைகத்தி, அரச மரம் உள்ளிட்ட விதைகள் அடங்கிய விதைப்பந்துகள் வீசினர். இந்தப் பணிகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் மகேந்திரன் மேற்பார்வை செய்து வருகிறார்.
The post கடமலைக்குண்டு மூல வைகை ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய அரசு பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.