×

திருவாலங்காடு-அரக்கோணம் 4 வழிச்சாலை பணி சென்னை வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

திருத்தணி, டிச. 28: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி உட்கோட்டம் பராமரிப்பில் உள்ள திருவாலங்காடு-அரக்கோணம் 2 வழிச்சாலையை முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹82 கோடி மதிப்பீட்டில் திருவாலங்காடு முதல் அரக்கோணம் நகராட்சி எல்லை, சில்வர் பேட்டை வரை 9.2 கிமீ தூரம் 4 வழிச்சாலையாக விரிவுப்படுத்தும் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. சாலைப் பணிகள் நடைபெறும் மாநில நெடுஞ்சாலையில் 21 இடங்களில் சிறுபாலங்கள் அகலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை சென்னை வட்ட கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவள்ளூர்-அரக்கோணம் மார்க்கத்தில் போக்குவரத்து வசதி மேம்படுத்தவும், கிராமமக்கள் பயன்பெற ஏதுவாக அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார் தெரிவித்தார். ஆய்வின்போது, திருவள்ளூர் கோட்ட பொறியாளர் து.சிற்றரசு, திருத்தணி உதவி கோட்ட பொறியாளர் கே.ரகுராமன், உதவி பொறியாளர் ஞான அருள்ராஜ் உட்பட நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post திருவாலங்காடு-அரக்கோணம் 4 வழிச்சாலை பணி சென்னை வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Thiruvalankadu-Arakkonam ,Chennai Circle Supervising Engineer ,Tiruttani ,-lane ,Tiruttani Utkottam ,Tiruvallur district ,Thiruvalankadu ,Arakkonam ,Silverpet ,Thiruvalankadu- ,Dinakaran ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் திருப்படித் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்