தண்டையார்பேட்டை, டிச.28: மணலில் உள்ள தனியார் காஸ் தொழிற்சாலையில் இருந்து குஜராத் மாநில பதிவு எண் கொண்ட லாரியில், 66 சிஎன்ஜி காஸ் சிலிண்டகள் ஏற்றப்பட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு தேனாம்பேட்டையில் உள்ள காஸ் கம்பெனிக்கு கொண்டு செல்லப்பட்டது. காசிமேடு சூரியநாராயணர் சாலை – கொடிமர சாலை சந்திப்பில் லாரி சென்றபோது, அதில் இருந்த சிலிண்டரில் இருந்து காஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், டிரைவர் லாரியை சாலையோரத்தில் நிறுத்தினார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காஸ் கசிவை சரிசெய்தனர். இதையடுத்து லாரியை தொழிற்சாலைக்கே அனுப்பி வைத்தனர்.
The post லாரியில் ஏற்றி சென்ற சிலிண்டரில் காஸ் கசிவு appeared first on Dinakaran.