×

வீட்டிற்குள் புகுந்த 3 அடி சாரை பாம்பு

மாமல்லபுரம், டிச.28: வடக்கு மாமல்லபுரம் பகுதியை சேர்ந்தவர் வினோத் ராஜ். இவரது, வீட்டில் அனைவரும் நேற்று மாலை டி.வி. பார்த்து கொண்டிருந்தனர். அப்போது, 3 அடி நீளமுள்ள சாரை பாம்பு திடீரென வீட்டிற்குள் புகுந்தது. இதைப் பார்த்த, குடும்பத்தினர் பாம்பு, பாம்பு என அலறினர். இதுகுறித்து, மாமல்லபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மாமல்லபுரம் தீயணைப்பு அலுவலர் இன்பராஜ் தலைமையில், முதன்மை தீயணைப்பாளர்கள் ரமேஷ் பாபு, வெங்கட கிருஷ்ணன் மற்றும் 5 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பை தேடினர். அப்போது, வீட்டின் நுழைவு பகுதிக்கு முன்பு அழகுச் செடி தொட்டியில் பதுங்கி இருந்த 3 அடி நீளமுள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்து, பக்கிங்காம் கால்வாய்க்கு அருகே காட்டுப் பகுதியில் விட்டனர்.

The post வீட்டிற்குள் புகுந்த 3 அடி சாரை பாம்பு appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Vinod Raj ,North Mamallapuram ,
× RELATED மாமல்லபுரம் மரகத பூங்காவில் ஒளிரும்...