×

சமூக வலைதளங்களில் சிறுமிகளின் ஆபாச வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது

அண்ணாநகர், டிச.28: சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவதாக அண்ணாநகர் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் சாந்தி தேவிக்கு புகார் வந்தது. அவரது தலைமையில் தனிப்படை போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து, தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த வெங்கா ரகுநாத் ரெட்டி (22) என்பவரை, கடந்த 10ம் தேதி கைது செய்தனர். விசாரணையில் இவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளத்தில் பதிவு செய்ததும், கேரளா மாநிலத்தில் வசிக்கும் இவரது நண்பருக்கு சிறுமிகளின் வீடியோக்களை அனுப்பியதும் தெரியவந்தது. அதன்பேரில், கடந்த 21ம் தேதி கேரள மாநிலத்துக்கு சென்று, பி.காம் பட்டதாரி ஹரி (23) என்பவரை கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த நவீன் சங்கர் (23) என்பவரும் சிறுமிகளின் ஆபாச வீடியோ பதிவிட்டது தெரிந்தது. துரைப்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

The post சமூக வலைதளங்களில் சிறுமிகளின் ஆபாச வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Cyber ,Inspector ,Shanthi Devi ,Venga ,Telangana… ,Dinakaran ,
× RELATED குடியிருப்புவாசிகளிடம் தகராறு...