- பூமி பூஜா
- ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம்
- திருப்பூர்
- திருப்பூர் மாவட்டம்
- ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் செங்கப்பள்ளி ஊராட்சி
- நீலகவுண்டம்பாளையம்
- யூனியன்
- நிதி
- ஜே.வி.பி
- தின மலர்
திருப்பூர், டிச. 27: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் செங்கப்பள்ளி ஊராட்சி நீலாக்கவுண்டம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், ஜே.வி.பி. நகரில் உள்ள பிரதான வீதி மண் சாலையை தார்சாலையாக அமைக்கும் பணி, ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி முதல் சென்னிமலை பாளையம் புது காலனி செல்லும் சாலையை தார் சாலையாக பலப்படுத்தும் பணி, சின்னியம்பாளையத்தில் கனிமம் மற்றும் சுரங்கம் நிதியின் கீழ் ரூ.10.77 லட்சம் மதிப்பீட்டில் செம்மாண்டம்பாளையம் ஆதிதிராவிடர் குடியிருப்பில் இருந்து மயானம் வரை வடிகால் கல்வெட்டு அமைக்கும் பணி,
கனிமம் மற்றும் சுரங்கம் நிதியின் கீழ் ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டில் சின்னியம்பாளையம் வரகுட்டை முதல் குறவன்தோட்டம் வரை தார் சாலை அமைக்கும் பணி, ரூ.12.10 லட்சம் மதிப்பீட்டில் செம்மாண்டம்பாளையம் எஸ்.எஸ். மணியம் வீடு முதல் சாந்தி வீடு வரை புதிய கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.57.47 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மோகன சுந்தரம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி, ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பரமணியம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.57.47 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை appeared first on Dinakaran.