×

சிவன்மலையில் மின் மோட்டார் திருட்டு

 

காங்கயம்,டிச.24: காங்கயம் அடுத்துள்ள சிவன் மலையில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சிவன்மலை ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள பகுதியில் துரைசாமி என்பவருக்கு சொந்தமான கான்கிரீட் அமைக்க பயன்படுத்தப்படும் இரும்பு பலகை 68 நேற்று முன்தினம் திருடுபோனது.

இதே போல் சிவன்மலை ஊராட்சியில் குப்பைகளை அரைக்க பயன்படும் மின்மோட்டரையும், மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவன்மலை சுற்றுப்பகுதியில் அவ்வப்போது திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

The post சிவன்மலையில் மின் மோட்டார் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Sivanmalai ,Kangayam ,Murugan ,Duraisamy ,Dinakaran ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் முடி...