- செயின்
- திருப்பூர்
- விஜயமாரிஸ்
- பெரியகருணைபாளையம்
- அவினாசி
- ராம்ப்ரியா
- திருமுருகன்பூண்டி நல்லத்துப்பாளையம்...
திருப்பூர், டிச.24: அவினாசியை அடுத்த பெரியகருணைபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயமாரீஸ். இவரது மகள் ராம்பிரியா (20). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ராம்பிரியா திருப்பூரில் இருந்து அவினாசி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
திருமுருகன்பூண்டி நல்லாத்துபாலம் அருகே சென்றபோது, ராம்பிரியாவை பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர் ஒருவர் திடீரென ராம்பிரியா கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சிடைந்த ராம்பிரியா கூச்சல் போட்டார். ஆனால் மர்ம நபர் அங்கிருந்து சங்கிலியுடன் மோட்டார்சைக்கிளில் தப்பிச் சென்றார். இதுகுறித்து ராம்பிரியா கொடுத்த புகாரின் பேரில் திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post இளம்பெண்ணிடம் சங்கிலி பறிப்பு appeared first on Dinakaran.