×

உடுமலை ஒன்றியத்தில் 17 ஊராட்சிகளுக்கு 3 நாள் குடிநீர் ரத்து

 

உடுமலை, டிச. 27: உடுமலை ஒன்றியத்தில் குடிநீர் குழாய் மாற்றும் பணி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு 17 ஊராட்சிகளுக்கு குடிநீர் வராது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் திருப்பூர் கோட்ட நிர்வாக பொறியாளர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருமூர்த்தி அணை தளி வாய்க்காலை நீராதாரமாக கொண்டு 5 பேரூராட்சிகள், மடத்துக்குளம் மற்றும் உடுமலை ஒன்றியங்களை சேர்ந்த 318 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் குழாய்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளது.

தற்போது பழைய நீரேற்றும் குழாய்களில் இருந்து இணைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 27ம் தேதி (இன்று) முதல் 29ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ஆலாம்பாளையம், ஆண்டியூர், போடிப்பட்டி, சின்னக்குமாரபாளையம், கணபதிபாளையம், ஜல்லிபட்டி, கணக்கம்பாளையம், குரல்குட்டை, குறிச்சிக்கோட்டை, வடபூமிநத்தம், பள்ளபாளையம், பெரியவாளவாடி, பெரிய பாப்பனூத்து, பூலாங்கிணறு, ஆர்.வேலூர், ராகல்பாவி, தின்னப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post உடுமலை ஒன்றியத்தில் 17 ஊராட்சிகளுக்கு 3 நாள் குடிநீர் ரத்து appeared first on Dinakaran.

Tags : Udumalai union ,Udumalai ,Murugesan ,Tiruppur ,Divisional Administrative ,Tamil Nadu Water Supply and Drainage Board… ,
× RELATED கிளுவன்காட்டூர் கிளை வாய்க்காலை தூர் வார கோரிக்கை