×

ஓடும் ரயிலில் தொழிலாளி சாவு

 

திருப்பூர், டிச.21: சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் முகமது யாகுப் (55). இவர், தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்தார். பணி காரணமாக கோவை வந்த முகமது யாகுப் நேற்று கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு செல்லும் ரயிலில் கோவையில் இருந்து சென்னை செல்ல ஏறியுள்ளார். திருப்பூர் ரயில் நிலையம் அருகே வந்த போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

திருப்பூர் ரயில் நிலையத்திற்கு ரயில் வரவும் அருகில் இருந்தவர்கள் அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post ஓடும் ரயிலில் தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Mohammed Yakub ,Chennai ,Mohammad Yakub ,Goa ,Kanyakumari ,Bengaluru ,Dinakaran ,
× RELATED தனியார் டவுன் பஸ்கள் மோதி விபத்து;...