×

ரெட்டியார்சத்திரம் முருநெல்லிகோட்டையில் பேவர் பிளாக் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

ரெட்டியார்சத்திரம், டிச. 19: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் முருநெல்லிக்கோட்டை ஊராட்சியில் விநாயகர் கோயில் மற்றும் பழநியாண்டவர் கோயில் முன்பாக பேவர் பிளாக் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சின்னு (எ) முருகன் தலைமை வகித்து பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமு வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, ஒன்றிய துணை தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன், அவை தலைவர் சவுந்தர்ராஜன், கிளை செயலாளர் முத்துராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post ரெட்டியார்சத்திரம் முருநெல்லிகோட்டையில் பேவர் பிளாக் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை appeared first on Dinakaran.

Tags : Bhoomi Pooja ,Redtiyarshatram ,Murunellikottai ,Vinayagar ,Temple ,Palaniyandavar Temple ,Redtiyarshatram Union ,Murunellikottai Panchayat ,Panchayat ,President ,Chinnu (A) Murugan ,Bhoomi Pooja… ,
× RELATED ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய...