×

கெங்கவல்லி அருகே கிணற்றில் தவறி விழுந்த 2 காட்டுப்பன்றிகள் மீட்பு

கெங்கவல்லி, டிச.27: சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே பைத்தூர் எல்லை, தென்னம்பிள்ளையூர் கிராமத்தில் வசித்து வருபவர் வேலுசாமி மனைவி பச்சையம்மாள். விவசாயியான இவரது தோட்டத்து கிணற்றில், நேற்று 2 காட்டுப்பன்றிகள் தவறி விழுந்து விட்டன. இதை கண்ட வேலுசாமி, கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) அசோகன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து, கிணற்றில் தவறி விழுந்த 2 காட்டுப்பன்றிகளையும் உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

The post கெங்கவல்லி அருகே கிணற்றில் தவறி விழுந்த 2 காட்டுப்பன்றிகள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Velusamy ,Pachaiyammal ,Thennampillaiyur ,Salem district ,Baithur ,Kengavalli fire department… ,Dinakaran ,
× RELATED மரத்தில் கூடு கட்டிய விஷ கதண்டுகள் அழிப்பு