×

திருவள்ளுவர் தினத்தையொட்டி இறைச்சிக்கடைகள் 15ம் தேதி மூடல்

 

சேலம், ஜன.12: திருவள்ளுவர் தினத்தையொட்டி 15ம் தேதி இறைச்சிக்கூடங்கள் மற்றும் இறைச்சிக்கடைகள் செயல்பட தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருவள்ளுவர் தினத்தன்று சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் இறைச்சிக்கூடங்கள் மற்றும் இறைச்சிக்கடைகள் விற்பனை தடை செய்யப்படுகிறது. அரசின் உத்தரவிற்கிணங்க, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக்கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளை மூடி மாகநராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அரசின் உத்தரவை மீறி சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் இறைச்சிக்கடைகளின் உரிமையாளர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்தகவலை மாநகராட்சி ஆணையர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

The post திருவள்ளுவர் தினத்தையொட்டி இறைச்சிக்கடைகள் 15ம் தேதி மூடல் appeared first on Dinakaran.

Tags : Thiruvalluvar Day ,Salem ,Salem Corporation ,Dinakaran ,
× RELATED சினிமாவை மிஞ்சும் பரபரப்பு சம்பவம்:...