×

டூவீலர் திருடிய 2 பேர் கைது

சேலம், ஜன.11: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்திநகரை சேர்ந்தவர் கேசவன் (32). இவர் கடந்த 3ம்ேததி உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரது மாமாவை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அழைத்து வந்தார். அவரது டூவீலரை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, டூவீலரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் , அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இதில் டூவீலரை திருடிச்சென்றது அன்னதானப்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாரிமுத்து (43), ஓமலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்த சீனிவாசன்(45) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து டூவீலரையும் மீட்டனர்.

The post டூவீலர் திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Kesavan ,Gandhinagar, Kumarapalayam, Namakkal district ,Salem Government Hospital ,Dinakaran ,
× RELATED சினிமாவை மிஞ்சும் பரபரப்பு சம்பவம்:...