×

டாஸ்மாக் கடைகள் 15,26ம் தேதியில் மூடல்

சேலம், ஜன.11: சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும் 15ம் தேதியும், குடியரசு தினத்தை முன்னிட்டு 26ம் தேதி அன்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இந்நாட்களில் உத்தரவை மீறி மதுபான விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post டாஸ்மாக் கடைகள் 15,26ம் தேதியில் மூடல் appeared first on Dinakaran.

Tags : TOSMACK ,SALEM ,SALEM DISTRICT ,PRINDADEVI ,Tasmak ,Dinakaran ,
× RELATED காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும்...