சேலம், ஜன.12: தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், அவதூறாக பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த 9ம்தேதி சீமான் மீது 6 போலீஸ் ஸ்டேசன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2வது நாளாக நேற்றுமுன்தினம் (10ம்தேதி) 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்காடு, மகுடஞ்சாவடி, மேச்சேரி ஆகிய ஸ்டேசன்களில் திராவிடர் விடுதலை கழகம் சார்பிலும், ஓமலூர், வாழப்பாடி ஸ்டேசனில் தி.க. சார்பிலும், ஏத்தாப்பூரில் திமுக சார்பிலும் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யவும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
The post சேலத்தில் சீமான் மீது மேலும் 6 வழக்கு பதிவு appeared first on Dinakaran.