- ஜோஸ் அலுகாஸ் ஆபரணம்
- கும்பகோணம்
- கிரிஸ்துவர்
- கிறிஸ்துமஸ்
- இயேசு கிறிஸ்து
- பூமியில்
- ஜோஸ்
- அலுகாஸ் ஜ்வெலரி
கும்பகோணம், டிச.25: கும்பகோணம் ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரியில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாக அவதரித்த தினத்தை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் அழகிய கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படும். அதன்படி கும்பகோணம் டைமண்ட் பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள பிரபலமான ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரியில் அழகிய கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஏசு கிறிஸ்து பிறந்த போது எந்த மாதிரியான சூழல் இருந்ததோ அதை அப்படியே நம் கண்முன் கொண்டுவரும் வகையில் தத்ரூபமான மனித உருவங்கள், தொழுவத்தின் வடிவம் போன்றவை கண்கவரும் வண்ணம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இதனை கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
The post கும்பகோணம் ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரியில் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பு appeared first on Dinakaran.
