- கட்டுமானத் தொழிலாளர் சங்கம்
- தமிழ்நாடு அரசு
- சென்னை
- அகல் இந்திய கட்டிட தொழிலாளர் ச
- அகில இந்திய கட்டிடத் தொழிலாளர் மத்திய சங்கம்
சென்னை: கட்டுமானம் அமைப்புச்சார தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பும், ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் மு.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் எம்.ஆறுமுகம், இ.பரமானந்தம், ராயபுரம் பி.கோபிநாத், எம்.சி.துரைவேலு, கன்னியம்மாள், மரக்காணம் ஆறுமுகம், கோவை பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசார தொழிலாளர்களுக்கு வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் பொங்கல் திருநாளையொட்டி பொங்கல் தொகுப்பும், ரூ.5 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறோம். கட்டுமான தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் நிவாரணம் ரூ.5 லட்சம் என்பதை ரூ.10 லட்சமாகவும், இயற்கை மரணம் அடைந்தால் ரூ.50 ஆயிரம் என்பதை 2 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும். வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் பதிவு செய்தவுடனும், புதுப்பித்த பிறகு ஒரு மாதத்தில் உறுப்பினர் அட்டை கிடைத்திட வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். சென்னை பெருமாநகராட்சியிலும், அனைத்து மாநகராட்சி, உள்ளாட்சிகளிலும் வீடு கட்டுவதற்கு, வரைபட அனுமதி பெறுவதற்கு கடுமையான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு கட்டுமான பணிகள் சரிவர நடைப்பெறவில்லை. இதனை முதல்வர் பரிசீலனை செய்து நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post கட்டுமானம் அமைப்புச்சார தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு, ரூ.5 ஆயிரம்:தமிழக அரசுக்கு கட்டிட தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.