சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் புகார் பெறப்பட்டது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கம் அளித்துள்ளார். பல்கலை. வளாகத்தில் நடந்த குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அவசர உதவி எண் 100-க்கு தொடர்பு கொண்டு கூறினார். புகாரின் பேரில் விசாரிக்க வந்த போலீசிடம் POSH உள் விசாரணை குழுவை சேர்ந்த பேராசிரியர் உதவியோடு மாணவி புகார் அளித்தார். பல்கலை.க்கு வந்து போலீஸ் விசாரிக்கும்போதுதான் இந்த சம்பவம் தொடர்பாக POSH குழுவில் இருந்த மற்றவர்களுக்கு தெரிந்தது. இதை வைத்துதான் POSH குழு நேரடியாக புகார் தரவில்லை என கூறினேன்; அது தவறான பொருள்படும்படி அமைந்துவிட்டது என அமைச்சர் கூறினார்.
The post அண்ணா பல்கலை. மாணவி புகார்: அமைச்சர் கோவி.செழியன் விளக்கம் appeared first on Dinakaran.