×

திருச்செந்தூர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் சிறப்பு நடைபாதை


திருச்செந்தூர்: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சுரேஷ், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில், ‘திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள், வயதான பக்தர்கள் மற்றும் குழந்தைகள் சிரமமின்றி பாதுகாப்பாக சென்று கடலில் நீராடி வர வசதியாக நிரந்தரமாக சிறப்பு நடைபாதை அமைத்து தர வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் அளித்த பதில் கடிதத்தில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதான பக்தர்கள் எவ்வித சிரமமின்றி கடற்கரையில் இறங்குவதற்கும், கடலில் நீராடுவதற்கும் சிறப்பு நடைபாதை அமைப்பதற்கு உரிய மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

The post திருச்செந்தூர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் சிறப்பு நடைபாதை appeared first on Dinakaran.

Tags : Tiruchendur beach ,Tiruchendur ,Suresh ,Vasudevanallur ,Tenkasi ,Chief Minister ,M.K. Stalin ,Thiruchendur Subramania Swamy Temple ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயில்...