×

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் குவியும் ஆடைகள்: புனிதம் கெடுவதாக பக்தர்கள் வேதனை

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் கடலில் நீராடும் பக்தர்கள் விட்டுச் செல்லும் துணிகள், கடற்கரையில் ஒதுங்கிக் கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், புனிதம் கெடுவதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மட்டுமே அழகிய கடற்கரையில் அமைந்துள்ளது.

எனவே இங்குள்ள கடலில் நீராடுவது புண்ணியமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடிய பிறகே சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு புனித நீராடுபவர்கள் பரிகாரமாக நினைத்து தங்கள் பாவங்கள் நீங்குவதாக கருதி தங்களின் உடைகளை கடலில் கழற்றி விடுவது தற்போது அதிகரித்துள்ளது.

கடல் தன்னுள்ளே வரும் பொருட்களை மீண்டும் கரைக்கு கொண்டு சேர்ப்பதால் பத்தர்களால் கழற்றி விடப்பட்ட துணிகள், ஆடைகள் முதலானவை கரையில் குவிந்து கிடக்கிறது. அதனை திருக்கோயில் தூய்மைப் பணியாளர்கள் சேகரித்து பெரும் சிரமத்துடன் அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும் கடற்கரையோரம் உள்ள பாறைகளிலும் துணிகள் மாட்டிக் கொண்டு அங்கு நீராடும் பக்தர்களின் காலில் சிக்கி ஆபத்தை விளைவிக்கிறது.

எனவே புனித நீராடும் கடலையும், பக்தர்கள் அமர்ந்து காற்று வாங்கும் கடற்கரையினையும் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் விதமாக துணிகளை போடுவதை திருக்கோயில் நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என பத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் குவியும் ஆடைகள்: புனிதம் கெடுவதாக பக்தர்கள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Tiruchendur Murugan Temple ,Tiruchendur ,Tiruchendur Subramania Swamy Temple ,Lord Murugan ,
× RELATED திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பலியான பாகன் மனைவிக்கு அரசு பணி