×

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மகப்பேறு உயிரிழப்புகள் ஏதும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மகப்பேறு உயிரிழப்புகள் ஏதும் இல்லை என சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை மாவட்டங்களில் புயலின்போது 1,526 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. 1,526 குழந்தைகள் பிறந்த நிலையில் மகப்பேறின்போது தாயோ, சேயோ யாரும் உயிரிழக்கவில்லை. கர்ப்பிணிகள் முன்கூட்டியே அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

The post ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மகப்பேறு உயிரிழப்புகள் ஏதும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Fenchal storm ,Minister ,M. Subramanian ,Chennai ,Legislative Assembly ,Cyclone Fenchal ,Villupuram ,Thiruvannamalai ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...