×

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

பள்ளிபாளையம், டிச.5: வெள்ளத்தால் உடமைகளை இழந்துள்ள மக்களுக்கு, வழங்க பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள தொழிலதிபர்கள், வணிகர்கள், வியாபாரிகளிடம் நகரமன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நிவாரண பொருள்கள் சேகரிக்கப்பட்டது. அரிசி, பருப்பு, எண்ணை, போர்வை, புடவை, பால் பவுடர், தீப்பெட்டி, சர்க்கரை உள்ளிட்ட ₹5 லட்சம் மதிப்புள்ள 23 வகையான பொருள்கள் திரட்டி தனி லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், நகரமன்ற துணைத்தலைவர் பாலமுருகன், நகராட்சி ஆணையாளர் தயாளன், பொறியாளர் ரேணுகா மற்றும் உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் appeared first on Dinakaran.

Tags : City Mayor ,Selvaraj ,Dinakaran ,
× RELATED எட்டையபுரம் அருகே காரின் மீது...