×

நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா கம்யூனிஸ்ட் கொடியேற்றம்

குமாரபாளையம், டிச.27: சுதந்திர போராட்ட தியாகியும், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான நல்லக்கண்ணுவின் 100வது பிறந்தநாள் விழா, குமாரபாளையத்தில் நேற்று நடைபெற்றது. நகர செயலாளர் கணேஷ் குமார் தலைமையில், கட்சியின் மூத்த தலைவர் மணிவேல் கொடியேற்றி வைத்தார். நகர துணை செயலாளர் அசோகன், வடக்கு ஒன்றிய செயலாளர் அர்த்தநாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் கார்த்திகேயன், கட்சி நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, ரவி, கேசவன், விஜய் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, நல்லக்கண்ணுவின் தன்னலமற்ற தியாக வாழ்க்கையை நினைவு கூர்ந்து பேசினர்.

The post நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா கம்யூனிஸ்ட் கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Nallakannu Centenary Celebration Communist Flag ,Kumarapalayam ,Indian Communist Party ,Nallakannu ,City Secretary ,Ganesh Kumar ,Manivel ,City Deputy Secretary… ,Nallakannu Centenary Celebration Communist Flag Hoisting ,
× RELATED சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஜரிகை...