×

வேன் மோதி வடமாநில தொழிலாளி பலி

பரமத்திவேலூர், டிச.20: நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள காகித அட்டை கம்பெனியில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திலிப் காட்டுவா மகன் பிரகாஷ் கட்டுவா(22) என்பவர், அங்குள்ள செல்லப்பம்பாளையத்தில் குடும்பத்துடன் வசிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நல்லூர் தபால் நிலையம் அருகே டூவீலரில் சென்றபோது, எதிரே வந்த வேன் மோதியது. இதில், படுகாயமடைந்த பிரகாஷ் கட்டுவாவை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post வேன் மோதி வடமாநில தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Paramathivelur ,Prakash Katuwa ,Dilip Katuwa ,Odisha State ,Kandampalayam, Namakkal district ,Nallur ,Van Moti ,North ,
× RELATED இன்ஸ்டாகிராம் மோகத்தால் சீரழிவு: 13...