×

சென்னைக்கு செல்லும் மேரிகோல்டு

நாமக்கல், டிச.21: தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பில், சென்னை செம்மொழி பூங்காவில், அடுத்த மாதம் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து, பல வகை மலர் செடிகள் வளர்த்து அனுப்பி வைக்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில், மேரிகோல்டு மலர்செடிகள் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. இதற்காக நர்சரியில் பதியமிட்டு, மேரிகோல்டு பூச்செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வருடம்தோறும் தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சிக்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து மலர் செடிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சென்னைக்கு செல்லும் மேரிகோல்டு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Namakkal ,Chennai Semmozhi Park ,Horticulture Department ,Tamil Nadu Government ,Namakkal District ,
× RELATED கரூர் நாமக்கல் பைபாஸ் சாலையோரம் நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும்