- அதிகாரப்பூர்வ மொழி சட்ட வாரம்
- நாமக்கல்
- தமிழ் அபிவிருத்தி திணைக்களம்
- மாவட்ட மைய நூலகம்
- மாவட்ட நூலகம்
- அதிகாரி
- தேன்மொழி
- உதவி இயக்குனர்
- பாரதி
நாமக்கல், டிச.21: நாமக்கல்லில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஆட்சிமொழி சட்ட வாரம் தொடக்க விழா மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் தேன்மொழி தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பாரதி வரவேற்றார். மாவட்ட மைய நூலக அலுவலர் சக்திவேல், தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். வாசகர் வட்டத் தலைவர் தில்லைசிவகுமார் பங்கேற்று பேசுகையில், குழந்தைகளுக்கும் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கும் தாய்மொழியில் பெயர் சூட்ட வேண்டுமென கேட்டுக் கொண்டார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் இல்ல நூலகர் செல்வம், நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் கலைஇளங்கோ, நூலகர் ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post ஆட்சிமொழி சட்ட வாரவிழா appeared first on Dinakaran.