×

வழிப்பறி திருடர்கள் 4 பேர் கைது

திருச்செங்கோடு, நவ.23: திருச்செங்கோடு அருகே 87.கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஆறுமுகம். எலக்ட்ரானிக் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம், திருச்செங்கோட்டில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, 4 பேர் வழிமறித்து அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு பணம் ஏதும் இல்லாததால் அடித்து உதைத்து விட்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செங்கோடு புறநகர் போலீசார் வழக்குப்பதிந்து விக்கி(எ) விக்னேஷ்(25), தொண்டிக்கரடு பரணிதரன்(28), ஈரோடு வீரப்பம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்தி(34), வரகூராம்பட்டியைச் சேர்ந்த பிரபு(31) ஆகியோரை கைது செய்தனர். பின்னர், திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சுரேஷ்பாபு அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி, சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post வழிப்பறி திருடர்கள் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Selvaraj ,Arumugam ,Goundampalayam ,
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது