×

சாரீ பிராசஸ் சங்க சிறப்பு கூட்டம்

இளம்பிள்ளை, நவ.23: சேலம் மாவட்டம், இளம்பிள்ளை சந்தைப்பேட்டையில் சேலம் வெஸ்ட் சாரீ பிராசஸ் ஓனர்ஸ் அசோசியேசன் சங்க சிறப்பு கூட்டம், தலைவர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் செயலாளர் சுரேஷ், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் பிராசஸ் தொழிலில், அடிக்கடி நிலவி வரும், பாக்கி தொகையினை வசூல் செய்ய சங்க உறுப்பினர்களுக்கு சங்கத்தின் சார்பில் தீர்வு காணப்படும், அனைத்து கோரிக்கை மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் சேலம், தாதகாப்பட்டி,கருங்கல்பட்டி, நெத்திமேடு, கொண்டலாம்பட்டி, இளம்பிள்ளை, கே.கே.நகர், வேம்படிதாளம், மகுடஞ்சாவடி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post சாரீ பிராசஸ் சங்க சிறப்பு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Saree ,Process Society ,Yumappillai ,Salem West Chari Process Owners Association ,Yumupillai ,Salem district ,President ,Loganathan ,Suresh ,Treasurer ,Venkatraman ,Saree Process ,Association ,Dinakaran ,
× RELATED வடக்கஞ்சேரியில் ஒரே சேலையில் இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை