×

திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

ராசிபுரம்,நவ.19: வெண்ணந்தூர் ஒன்றியத்தில், திமுக பாக முகவர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் ஆய்வு கூட்டம், ஒன்றிய செயலாளர் துரைசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், ராசிபுரம் சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் நன்னியூர் ராஜேந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு, ஆய்வு பணிகளை மேற்கொண்டு பாக முகவர்களுக்கு புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கம் முகாமில் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனைகள் வழங்கினர். நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் பாலச்சந்திரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சண்முகம், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் விஜய பாஸ்கரன், மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கௌரி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ரவீந்தர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Agents ,Rasipuram ,Vennandur Union ,Union ,Duraisamy ,Legislative Constituency ,Nanniyur Rajendran ,Adi Dravidar ,Health Minister ,Madivendan ,Dinakaran ,
× RELATED திமுக அரசு மீது வி.சி.க.வுக்கு அதிருப்தி ஏதும் இல்லை : திருமாவளவன்