×

மதுரை விமான நிலையத்துக்கு நிலம் வழங்கியவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று இடத்தை வழங்கக் கோரி சின்ன உடைப்பு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் பன்னெடுங்காலமாக வசித்து வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று ஏற்பாடுகளை செய்து தர மறுப்பது கண்டனத்திற்குரியது. தங்களின் வாழ்வாதார தேவைகளுக்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சின்ன உடைப்பு கிராம மக்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

The post மதுரை விமான நிலையத்துக்கு நிலம் வழங்கியவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: டிடிவி.தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Madurai Airport ,TTV.Thinakaran ,CHENNAI ,AAMUK ,General ,Twitter ,Chinna Utuppu ,Dinakaran ,
× RELATED வெளிநடப்பு செய்பவருக்கு ஓபன் சேலஞ்ச்...