×

துவரங்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் காய்கறி வேன் கவிழ்ந்தது

 

துவரங்குறிச்சி, நவ.16: துவரங்குறிச்சி அருகே மினி சரக்கு வேன் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மதுரையை சேர்ந்த சின்னசாமி மகன் வினோத்குமார் (22) என்பவர் மினி சரக்கு லாரியில் காய்கறிகளில் ஏற்றிக்கொண்டு திருச்சி விமான நிலையம் காய்கறி மார்க்கெட் செல்வதற்காக நேற்றுமாலை மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது துவரங்குறிச்சி நத்தம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது மாடு குறுக்கே வந்தது.

இதனைக் கண்ட டிரைவர் வினோத்குமார் மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக வாகனத்தை திருப்ப முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மினி சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் எவ்வித காயங்கள் இன்றி உயிர் தப்பினார். உடனடியாக சம்பவ இடத்திற்கு கிரேன் வரவழைக்கப்பட்டு சாலையில் கவிழ்ந்த மினி சரக்கு வேனை தூக்கி நிறுத்தி அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post துவரங்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் காய்கறி வேன் கவிழ்ந்தது appeared first on Dinakaran.

Tags : Transboundary ,National Highway ,Chinnasamy ,Vinothkumar ,Madurai ,Trichy Airport ,Transakari ,Dinakaran ,
× RELATED ஐதராபாத் – கம்மம் தேசிய...