×

திருச்சி முசிறி தாலுகாவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

 

முசிறி , ஜன.11: முசிறி அருகே அயித்தாம்பட்டியில் கோட்டாட்சியர் பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். திருச்சி மாவட்டம், முசிறி தாலுகாவில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு 131 நியாய விலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்றுமுன்தினம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விலையில்லா வேஷ்டி ,சேலையுடம் பொங்கல் தொகுப்பு 71,722 பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புகள் முசிறி வட்டத்தில் முதல் நாள் 23 ஆயிரத்து 62 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இது 32.15 சதவிகிதம் ஆகும். முசிறி அருகே உள்ள அயித்தாம் பட்டி நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பை முசிறி கோட்டாட்சியர் ஆரமுததேவசேனா பயனாளிகளுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். முசிறி வட்டாட்சியர் லோகநாதன், வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post திருச்சி முசிறி தாலுகாவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruchi-Musiri Taluga ,Musiri ,Pongal ,Aythampatti ,TAMIL GOVERNMENT ,TRICHI DISTRICT ,MUSIRI TALUKA ,Trichy ,Taluga ,
× RELATED முசிறி அருகே தும்பலம் வனப்பகுதியில்...