×

6 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை திருடிக் கொண்டு ஓட்டம் பிடித்த பெண்

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் தீபாவளி நேரத்தில் நகைக் கடையில் பணிக்குச் சேர்ந்த பெண் ஒருவர், 6 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை திருடிக் கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

கடையின் உரிமையாளர் சுரேஷ் ஜெயின், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார். கடந்த 3ம் தேதி முதல் அப்பெண் பணிக்கு வராததால், சந்தேகம் அடைந்து நகையை சோதனை செய்த போது போலியாக செய்து வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

சுமார் 6 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை போலியாக தயார் செய்து வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். மேலும், பணிக்குச் சேர்ந்தபோது அப்பெண் கொடுத்த அனைத்து ஆவணங்களும் போலியானவை என்பதும் தெரிய வந்துள்ளது.

 

 

 

 

 

 

The post 6 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை திருடிக் கொண்டு ஓட்டம் பிடித்த பெண் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Diwali ,Thiagarayar, Chennai ,Suresh Jain ,Mambalam Police Station ,
× RELATED மீனாட்சி படம் திருட்டு கதையா?