×

40 வயது பெண் கூட்டு பலாத்காரம் 4 பேர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 40 வயது பெண், கடந்த 29ம் தேதி மாலை புத்தேந்தலில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றார். ராமநாதபுரம் அச்சுந்தன்வயல் அருகே இயற்கை உபாதைக்காக காட்டு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் போதையில் இருந்த 4 பேர் சேர்ந்து அந்த பெண்ணை, கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட அவர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில், ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தினர். இதில் புத்தேந்தல் பகுதியை சேர்ந்த புவனேஷ், முருகன், செல்வகுமார், குட்டி ஆகிய 4 பேர் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து நேற்று முன்தினம் பரமக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post 40 வயது பெண் கூட்டு பலாத்காரம் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Puthendal ,Achchundhanvayal ,
× RELATED போதுமான மழை பொழிவால் அமோக  விளைச்சல் அடைந்த சிறுதானியங்கள்