×

டிரைவர், நடத்துனர்கள் எதிர்பார்ப்பு: மது, புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

ஈரோடு, நவ. 10: ஈரோடு மாவட்டம் பெருந்துறை குன்னத்தூர் சாலையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், பெருந்துறை போலீசார் அங்கு சென்று சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த சிவகங்கை மாவட்டம் இளையன்குடி மேலத்தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் ஹரிசுதன் (22), என்பவரை பெருந்துறை போலீசார் கைது செய்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், ஆசனூர் காரப்பள்ளம் சோதனை சாவடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததாக திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி நாடார் வீதியை சேர்ந்தவர் மணி மகன் விஜய் (32), என்பவரை ஆசனூர் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 300 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். சுமார் 100 பேர் பணிபுரியும் பணிமனையில் கடந்த 10 ஆண்டுகளாக தேவையான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படவில்லை

The post டிரைவர், நடத்துனர்கள் எதிர்பார்ப்பு: மது, புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Perundurai Gunnathur road ,Erode district ,Perundurai ,Ilayayankudi ,Sivagangai district ,
× RELATED ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு